தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகும் நிலையில் அவருடைய ரசிகர்கள் எப்போது திருமணம் என்று கேட்டு வருகிறார்கள். நடிகரும் சிம்புவின் அப்பாவுமான டி. ராஜேந்தர் தன்னுடைய மகனுக்காக பெண் பார்த்து வருவதாக கூறிய நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. மேலும் இது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறும் நிலையில் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.