
தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு ஒரு 22 வயது இளம்பெண் நேற்று புகார் கொடுப்பதற்காக சென்றார். அந்தப் பெண் சிலர் தன்னைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக் கேட்டுஅங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் அந்த பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் அதிகாரிகள் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
அந்தப் பெண் பழனிசெட்டிபட்டி பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் பேருந்துக்காக காத்து நின்றார். அப்போது அந்த பெண்ணுக்குஏற்கனவே அறிமுகமான ஒரு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்று வீட்டில் கொண்டு விடுவதாக கூறியுள்ளனர். அதை நம்பி அந்தப்பெண் பைக்கில் ஏறிய நிலையில் வீட்டுக்கு கூட்டி செல்லாமல் மிரட்டி வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் இன்னும் இரண்டு பேர் வந்துள்ளனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அந்தபெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு பின்னர் வேறொரு இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த பெண் கொடுத்த புகாரின்படி ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.