பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் சம்பவ நாளில் லேப்டாப்பில் சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து சிதறியது. இதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் வீடு முழுவதும் மளமளவென தீ பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 சிறுவர்கள், 2 பெண்கள் உட்பட 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுவனும் சிறுமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.