
டெல்லிக்கு நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் ஒரு 42 வயது பெண் பயணம் செய்தார். இவர் கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு சென்றார். இந்த ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது கண்ணன் என்ற 32 வயது வாலிபர் அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம் கீழ்தாலுர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.