உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், அமெரிக்காவில் ‘சிகாடா’ (Cicada) என்று அழைக்கப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வைரஸ் மற்ற வகைகளை விட மிக விரைவாகத் தனது தன்மையை உருமாற்றிக் கொள்ளும் பண்பைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இந்த புதிய ‘சிகாடா’ வைரஸிற்கு எதிராகப் பெரிய அளவில் பலன் தருவதில்லை என்பது உலக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சர்வதேச நாடுகள் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.