2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக, பிசிசிஐ மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இப்போதே தங்களது ‘மாஸ்டர் பிளான்’-ஐத் தயார் செய்துவிட்டனர்.
இதற்காக 20 வீரர்கள் கொண்ட ஒரு உத்தேசப் பட்டியலைத் தேர்வுக்குழு தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்த ஐபிஎல் 2026 தொடரில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து இறுதிப் பட்டியல் முடிவு செய்யப்படும்.
இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பங்கேற்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அவர்களின் ஃபிட்னஸ் மற்றும் 2026-ல் அவர்கள் காட்டும் ஆட்டத்தைப் பொறுத்தே 2027-ல் இடம் கிடைக்குமா என்பது தெரியவரும்.
இதற்கிடையே, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே கேப்டனாக ஜஸ்பரீத் பும்ரா அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
