ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கிய அதிர்ச்சிக்குறிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தர்லுபாடு மண்டலத்திலுள்ள கலுஜுவ்வலபாடு எஸ்சி காலனியில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு ஆண் தனது மனைவியின் கைகளை கம்பத்தில் கட்டிவைத்து, பெல்டால் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண் வலியால் அலறி அழும் துயரமான காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் அடிக்கும் போதும், மற்றொரு பெண் அவரைத் தடுக்க முயற்சிக்கிறார். அந்த பெண் பாதிக்கப்பட்டவரின் தாய் எனக் கூறப்படுகிறது. எனினும், கணவர் தனது மனைவியை தொடர்ந்து அடிக்கவே செய்தார் எனத் தெரிகிறது.
Sensitive Content
ప్రకాశం జిల్లా తర్లుపాడు మండలంలో కలుజువ్వలపాడు ఎస్సీ కాలనీలో భార్యను దారుణంగా కొట్టిన భర్త
మద్యం మత్తులో భార్యను కట్టేసి బెల్టుతో కొడుతూ, కాళ్ళతో తన్నుతూ చిత్రహింసలకు గురి చేసిన భర్త గురునాధం బాలాజీ
అడ్డు వెళ్ళిన తల్లిపై కూడా దాడి pic.twitter.com/FNJ78hyf4c
— Telugu Scribe (@TeluguScribe) September 16, 2025
குற்றம் சாட்டப்பட்டவர் குருநாதம் பாலாஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சம்பவம் நிகழ்ந்த வேளையில் மதுபோதையில் இருந்ததாகவும், தனது மனைவியை பின்னால் இருந்து உதைத்து, காரணமில்லாமல் உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. ஆனால், சம்பவ வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனவும், குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
