தமிழகத்தில் மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க கியூஆர் குறியீடு வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின்வாரியத்தில் ஏற்கனவே இணையதளத்தில் மொபைல் எண்களைப் புதுப்பிப்பதற்கான வசதி உள்ளது. தற்போது கியூஆர் குறியீடு நுகர்வோருக்கு இதை இன்னும் எளிதாக்கும். கியூஆர் குறியீடு அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இருக்கும்.

அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் நுகர்வோர் தங்கள் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கலாம், நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்பட்ட கூடுதல் மொபைல் எண்களைச் சரிபார்க்கலாம் மற்றும் தேவையற்ற மொபைல் எண்களை நீக்கலாம்.