டி20 கிரிக்கெட்டில் புது வரலாற்றை தனதாக்கியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. நேற்றைய ஹைதராபாத் உடனான போட்டியில் விளையாடி விக்கெட் எடுத்ததன் மூலம், ஒரு விக்கெட் கீப்பராக டி20ல் அதிக விக்கெட் எடுத்த வீரராக தோனி மாறியுள்ளார். 208 விக்கெட்டுகளுடன் இவர் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக 207 உடன் குவிண்டன் அ டி காக், 205 உடன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்நிலையில் வயதாகும்போது அனுபவம் என்பதும் வரும், எனக்கு வயதாகிவிட்டது என்பதை மறைக்க முடியாது என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். SRH உடனான போட்டியில் வெற்றிபெற்றபின் தொடர்ந்து அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர். ‘சச்சின் டெண்டுல்கர் 16, 17 வயதிலே விளையாட தொடங்கிவிட்டதால் அவருக்கு இளம் வயதிலே அனுபவம் வந்துவிட்டது. எனக்கும் இப்போது வயதாகிவிட்டது’ என கூறியுள்ளார்.