
மின்சார வாகனங்களுக்கு மானியம் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 31ம் தேதியுடன் மானியம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையுள்ள நிலையில் மத்திய கனரா தொழில்துறை கூடுதலாக 278 கோடி ஒதுக்கீடு செய்து கால அவகாசத்தை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் டூவீலர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை, சிறிய மூன்று சக்கர மின்சார வாகனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை, பெரிய மூன்று சக்கர வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.