திருவாரூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின்சார விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50,000 நிவாரணமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.