சவுதி அரேபியாவில் புனிதப் பயணம் சென்ற இஸ்லாமியர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் அறிந்து தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சவுதி அரேபியாவின் மதீனாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 இஸ்லாமியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்தச் சோகச் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக விஜய் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தனது இரங்கல் செய்தியில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட இந்தத் துயரம், தமிழகம் மற்றும் தெலுங்கானா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா…
— TVK Vijay (@TVKVijayHQ) November 17, 2025
“>
