தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி போட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அர்ஜுன், மிஸ்கின் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.தற்போது படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு 500 பேர் நடனமாடும் வகையில் தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். அதனைப் போலவே தற்போது லியோ திரைப்படத்தில் ஒரு பாடலில் 2000 பேர் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.