சமூக வலைதளங்கள் என்பது எப்போதுமே வினோதமான மற்றும் ஆச்சரியமான சம்பவங்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் ஒரு திருமண வீடியோ, பார்ப்பவர்களை “இது கல்யாணமா? இல்லை தயிர் அண்டி (Dahi Handi) திருவிழாவா?” எனக் கேட்க வைத்துள்ளது. பொதுவாகத் திருமணங்களில் மாலை மாற்றும் போது மணமகன் அல்லது மணமகளை உறவினர்கள் தோளில் தூக்கி வைத்து விளையாடுவது வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் மணமக்களின் உறவினர்கள் அவர்களை மிக உயரத்திற்குத் தூக்கிப் பிடித்திருப்பது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்ற முடியாமல் அந்த உயரத்தில் மல்லுக்கட்டும் காட்சி ‘தயிர் அண்டி’ பானையை உடைக்க நடக்கும் போராட்டத்தைப் போலவே உள்ளது.
Ye Varmala hai yaa Dahi Handi 🤣😝 pic.twitter.com/5NLtgZ97Sp
— 𝐒ɦυ𐓣𝗒𝗍α (@Shunyta_007) March 17, 2026
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்ன கொடுமை இது! திருமணச் சடங்குகளில் ஏன் இவ்வளவு தேவையற்ற ஸ்டண்டுகள்?” எனச் சாடி வருகின்றனர். சிலர் வேடிக்கையாக, “இது மாலை மாற்றும் சடங்கு போலத் தெரியவில்லை, இந்தியா – பாகிஸ்தான் போர் போலத் தெரிகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், இவ்வளவு உயரத்தில் தூக்கும்போது தவறி விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால், இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளைத் திருமணங்களில் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் சமூக அக்கறையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
