மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், மனவளர்ச்சி குன்றியவர்கள், நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, பார்க்கின்சன் நோய், தசைச் சிதைவு  போன்ற நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தவர்கள் என 2,11,391 நபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் மேலும் பயன் அடைவதற்காக 26,951 நபர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

தற்போது அவர்களுக்கு மாவட்ட உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தின் பயனை முழுமையாக தகுதியுள்ள பயனாளிகள் பெரும் விதமாக நலத்துறையின் கீழ் பயன் பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், தேசிய அடையாள அட்டை எண், தங்களின் வங்கி கணக்கு எண், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம் மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் இந்த விவரங்களை விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தெரிவிக்கும் பட்சத்தில் அனைவருக்கும் விரைவில் உதவித்தொகை வழங்கவும், மேலும் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் வழங்கவும் வசதியாக அமையும். அதனால் பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.