இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில் நிலைய நுழைவாயில், பெட்டிகளில் சிரமமின்றி ஏறுவதற்கான வசதி, பிரெய்லி எழுத்து பெயர் பலகைகள், உயரம் குறைந்த டிக்கெட் கவுண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து வருகின்ற ஜனவரி 29ஆம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.