தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மக்கள் தங்களுக்குத் தேவையான நிலைப்பாட்டை எடுக்க இவ்வளவு உறுதியாகத் திரண்டு வந்து வாக்களித்ததற்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களுக்கும், புதிய முதலமைச்சருக்கும் எனது செழுமையான மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான வாழ்த்துகள். தமிழக அரசியலின் இந்தப் புதிய முகத்தையும், புதிய பரிமாணத்தையும் காண ஆவலாக உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

​ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் நானி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக “New Face of Tamil Politics” என அவர் குறிப்பிட்டிருப்பது, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை அங்கீகரிப்பதாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த மாபெரும் வெற்றியைத் திரையுலகினர் ஜாதி, மத பேதமின்றி ஒரு வரலாற்று நிகழ்வாகக் கொண்டாடி வருகின்றனர்.