கடந்த வருடம் மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படை வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுக்கு முகமது முய்சு கோரிக்கை வைத்தார்.

ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே மாலத்தீவுக்கும் லட்சத்தீவுக்கும் இடையே சில சச்சரவுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக சீனாவுக்கு சென்று விட்டு திரும்பிய முகமது முய்சு மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் 88 இந்திய படை வீரர்களும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் மாளிகை தரப்பில் கூறும் போது “மாலத்தீவில் இந்திய படையினர் தங்க முடியாது. இதுதான் முகமது முய்சு அரசின் கொள்கை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.