ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய கார் மெக்கானிக் செய்த சாதனை, இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள சாண்டில் பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப், தனது பழைய மாருதி 800 காரை அப்படியே உருமாற்றி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘லம்போர்கினி அவெண்டடார்’ (Lamborghini Aventador) காராக மாற்றி அசத்தியுள்ளார். ‘டார்சன் தி வண்டர் கார்’ படத்தைப் பார்த்துவிட்டு, சிறுவயது முதல் தனக்கென ஒரு ஸ்பெஷல் காரை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த ஆரிப், சுமார் 2 வருட கடின உழைப்பிற்குப் பிறகு இந்த ‘சுதேசி லம்போர்கினி’யை உருவாக்கியுள்ளார்.
जुगाड़ से जादू! झारखण्ड के आरिफ ने पुरानी मारुती 800 को बना दिया करोडो की लम्बोर्गिनी, देसी हुनर देखकर विदेशी भी हैरान pic.twitter.com/KpN66nHYxN
— Ranchi LIVE (@ranchilivenews) March 3, 2026
பெரிய தொழிற்சாலைகளோ, நவீன இயந்திரங்களோ இல்லாத ஒரு சிறிய கரேஜில் வைத்து, தனது சொந்தக் கைகளாலேயே வெல்டிங் மற்றும் டிசைன் வேலைகளை ஆரிப் செய்துள்ளார். 16 இன்ச் அலாய் வீல்கள், ஸ்போர்ட்டி 2-சீட்டர் லுக், சன்ரூஃப், ரிமோட் லாக் மற்றும் அதிரடி மியூசிக் சிஸ்டம் என இந்தக் கார் சாலையில் செல்லும் போது மக்கள் திகைத்துப் போய் நின்று வேடிக்கை பார்க்கின்றனர். குறிப்பாக, இந்தக் காரின் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் போது வரும் அந்த ‘சுப்பர் கார்’ கர்ஜனை, இது மாருதி 800 கார் தானா? என்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
