தமிழ் சினிமாவில் காமெடி மூலமாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ரோபோ சங்கர். இவர் கடந்த வருடம் உடல்நிலை பாதிக்கப்பட்ட மிகவும் மோசமான நிலையில் இருந்ததோடு உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக மாறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் பிரபல டிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார் . மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து  ரசிகர்களை கவர்ந்தார். இவர் தன்னுடைய உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் திருமண வரவேற்பில் மணமகன் கார்த்திக் செய்த செயல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது .ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், கார்த்திக்கும் மேடையில் நடனமாடிய போது பிரியங்காவின் உதட்டில் அவர் முத்தம் கொடுத்துள்ளார். இது இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சை கிளப்பியது. மாமியாருக்கும் மருமகன் உதட்டில் முத்தம் கொடுப்பது எந்த கலாச்சாரம் என்று பலர் கேள்வி எழுப்பி திட்டி வந்தார்கள்.

இந்த நிலையில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். நான் என்னுடைய அக்காவிற்கு 9மாமியார்) கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனேன். ஆனால் அது எதிர்பாராத விதமாக அவர் திரும்பியதால் உதட்டில் முத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் ப்ளான் பண்ணி உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.