2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக பாஜக-வுக்குள் தற்பொழுது வெடித்துள்ள ‘தலைமை மாற்றம்’ குறித்த விவகாரம் டெல்லி டூ சென்னை வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விகளால் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது பாஜக தேசியத் தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்றும் கமலாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
அதேநேரம், பாஜகவிலிருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் தலைவர் அண்ணாமலை தற்பொழுது தனிக்கட்சி தொடங்குவது குறித்துத் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை சற்றும் விரும்பாத டெல்லி மேலிடம், அண்ணாமலையைத் தடுத்து நிறுத்தி மீண்டும் அவரிடமே தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியைக் ஒப்படைக்க ‘ஸ்கெட்ச்’ போட்டு வருவதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் அடுத்த பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
