லண்டனில் வசிக்கும் தீபன்ஷி சவுதரி என்ற இந்தியப் பெண், தான் தங்கியிருக்கும் ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். லண்டனின் மையப்பகுதியான ஈஸ்ட் சென்ட்ரலில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு மாதம் 8 லட்சம் ரூபாய் (8,000 பவுண்டுகள்) வாடகை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நவீன வசதிகளுடன் கூடிய இந்த வீட்டின் உட்புறத் தோற்றத்தை அவர் சுற்றிக்காட்டியதோடு, “லண்டன் மிகவும் விலை உயர்ந்தது, ஆனால் இந்த இடம் அந்த வாடகைக்கு தகுதியானது” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 8 லட்சம் ரூபாய் வாடகை என்பது ஒரு சாதாரண வீட்டிற்கு மிக அதிகம் என்றும், கூறுகிறார்கள்.
View this post on Instagram
“>
அதே விலையில் லண்டனின் மற்ற பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளைப் பெற முடியும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இவ்வளவு அதிக வாடகை கொடுத்து தங்குவது தேவையற்றது என்று விமர்சித்தாலும், மற்றவர்கள் லண்டனின் பிரதான இடங்களில் வாடகை இப்படித்தான் இருக்கும் என அவருக்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
