மக்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் ஓய்வூதிய தொகையாக மாதம் தோறும் சந்தாதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இதனைத் தவிர 2000 ரூபாய், 3000 ரூபாய் மற்றும் நான்காயிரம் ரூபாய் என்பது போலவும் பென்ஷன் கிடைக்கும் வகையில் திட்டங்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 18 வயதுள்ள ஒருவர் 60 வயதில் ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற வேண்டும் என விரும்பினால் அவர் மாதம் தோறும் 42 ரூபாய் முதலீடு செய்து வரலாம். அடல் பென்ஷன் யோஜனா படிவங்களை நீங்கள் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உங்களுடைய வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.