மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் (GAIL) எரிபொருள் நிறுவனத்தில் தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 391 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் நிலையில் இந்த பணிக்கு டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல், பிபிஏ, பிஎஸ்சி, பிபிஎம், பிபிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த வேலைக்கு 26 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.24,500 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நிலையில் கடைசி நாள் செப்டம்பர் 7 ஆகும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.gailonline.com/CRApplyingGail.html என்ற ஆன்லைன் முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
