ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசி மிகவும் உதவிகரமாக உள்ளது. 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் இல்லை. இந்த திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலுத்தி பத்து ஆண்டுகள் சந்தா காலத்தை தேர்வு செய்யலாம். 11ம் ஆண்டு முதல் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் இறந்தால் செலுத்தப்பட்ட தொகை பாலிசிதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.