RTE எனப்படும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதனை கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகிகளும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்துவதில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.