மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைகழகத்தின் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் காரணமாக 04.12.2023 முதல் 09.12.2023 வரை நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் 11.12.2023 முதல் 16.12.2023 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in. இணையதளத்தில் காணவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.