
இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்படும். அதாவது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 75 ஆயிரம் நிதி உதவி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் OBC, EBC, DNT, NT , SNT வகைகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆம் வகுப்புக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் எட்டாம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். 11 ஆம் வகுப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் பத்தாம் வகுப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் எனவும் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.