அவசர காலங்களில் நமக்கு தேவையான பணத்தை PF கணக்கிலிருந்து எடுக்கலாம். ஆனால் பணத்தை எடுப்பதற்கு முன்பாக பி எஃப் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க பணம் தேவைப்பட்டால் தங்களுடைய பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கான நிபந்தனை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வேலையில் இருக்க வேண்டும்.

அவசர காலத்தில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் மாத சம்பளத்தை விட ஆறு மடங்கு பணத்தை பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கலாம். ஊழியர்கள் 58 வயதை நிறைவு செய்தால் இந்த தொகையில் ஒரே நேரத்தில் பணத்தை எடுக்கலாம். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.