பொதுவாக பலர் எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் பேன்சி நம்பர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் டிஎஸ்09-9999 என்ற பேன்சி நம்பரை ஆன்லைன் மூலம் போக்குவரத்து ஆணையம் ஏலம் விட்டது.

இந்த நம்பருக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் ஏலத்தில் மொத்தம் 11 பேர் கலந்து கொண்டனர். இதில் கடைசியாக தொழிலதிபர் ஒருவர் ரூ.25,50,002 கொடுத்து அந்த நம்பரை வாங்கினார். மேலும் தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கபட்ட பேன்சி நம்பர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.