மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  நிலையில் இந்த ஜாமீனை தற்போது சிறார் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அதோடு வருகின்ற ஜூன் 5-ம் தேதி வரை சிறார் கண்காணிப்பு மையத்தில் சிறுவனை அடைத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட கூடாது என மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.