மத்திய அரசு ஆனது இந்தியாவில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுதான் கிசான் கிரெடிட் கார்டு . இதன் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த கட்டியில் கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் மீன் வளர்ப்பு கால்நடை வளர்ப்பு தொடர்பான ஏதேனும் ஒரு தொழிலை தொடங்க விரும்பினால் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

இது ஒரு வகையான குறுகிய கால கடன் திட்டம். இதில் மலிவான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் நான்கு சதவீதம் வரையில் வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை திரும்ப செலுத்த விவசாயிகளுக்கு அதிக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டை பெறுவதற்கு அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டு.ம் அங்கு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை வாங்கி அந்த படிவத்துடன் முகவரி சான்று வருமான சான்று , அடையாள சான்று போன்றவற்றை இணைக்க வேண்டும். பின் படிவத்தை பூர்த்தி செய்து பிறகு அங்கு சமர்ப்பிக்க வேண்டும்