பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானி விருப்பத்தின் பெயரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார்.

ஏழைகளுக்கு சாலைகள் , மருத்துவமனை, கல்வி குறித்த கோரிக்கை வைத்தால் எதுவும் செய்வதில்லை. மக்கள் கொரோனாவால் செத்துக் கொண்டிருந்தபோது தட்டை தட்டி ஒலி எழுப்புமாறு சொன்னவரையா கடவுள் அனுப்பினார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.