தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதனைப் போலவே புதுக்கோட்டை அருகே முள்ளூர் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், தற்போது பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.