சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடு வளர்ப்பது ஆபத்தாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 4,189 மாடுகள், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 163 மாடுகள் பிடிபட்டுள்ளது. மேலும் முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாயும் அடுத்த முறை பிடிபட்டால் 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது