திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவரை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைக்க செங்கோட்டையன் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், அவர்கள் இருவரும் இதற்கு உடன்படவில்லை. இதனால் தனது பிளானை மாற்றிய செங்கோட்டையன், தற்போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய முன்னாள் அமைச்சரின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

​அந்த முன்னாள் அமைச்சருக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் எடப்பாடி பழனிசாமி (EPS) மீது கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அவரைத் தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!