சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காயம் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது. இதனால் விலை மளமளவென்று குறைந்துள்ளது. விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.