தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2,884.93 கோடி மதிப்பிலான திட்டங்களைத் திறந்து வைத்து, ரூ.1,114 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதேவேளை, பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் 2,23,013 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுவே திராவிட மாடல்!

அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா? பொய்களால் காரிருளை ஏற்படுத்த முடியுமா?
தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்ற எண்ணமே தவறானது. 2026-ஆம் ஆண்டிலும் இந்த மலிவான அரசியலை மக்கள் வீழ்த்துவார்கள். ‘நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற உறுதிப்பாட்டோடு தலைநிமிர்வோம்,” என்றார். மேலும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க எந்தவிதமான அரசியல் அவதூறும், பொய்யும் முடியாது என்பதையும், வளர்ச்சி திட்டங்களை நம் மக்கள் நேரடியாக அனுபவிக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.