தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. இவர் தமிழில் சிவாஜி மற்றும் ஜெய்சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் தெனாலிராமன் மற்றும் தங்கமலை ரகசியம் போன்ற பல படங்களில் நடித்துள்ள நிலையில் அரசியலிலும் ஈடுபட்டு பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை ஜமுனா சமீபத்தில் உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவருடைய மறைவு திரை உலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறை படமாக்குவதற்கு தற்போது திட்டமிட்டுள்ளனர். நடிகை ஜமுனா உயிருடன் இருக்கும்போதே திரைக்கதை தயாராகி விட்டதாகவும் தற்போது அந்த படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை ஜமுனாவின் கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவின் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.