தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக இன்று பட குழு காஷ்மீர் சென்ற நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியானதால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.