தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த நடிகர் மயில்சாமி கடந்த 18ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 57. அவரின் இறுதி சடங்கு ரசிகர்களின் கண்ணீர் மல்க நடந்து முடிந்தது. தீவிர சிவபக்தனான இவர் கடந்த 18ஆம் தேதி மகா சிவராத்திரி பூஜைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதஸ்வரர் கோவிலில் ட்ரம்ஸ் சிவமணி உடன் கலந்து கொண்டார். பூஜை முடிந்து வீடு திரும்பிய இவர் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இந்நிலையில் மயில்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மயில்சாமிக்கு சாலிகிராமத்தில் ஒரு வீடு, சென்னையில் மற்றொரு வீடு,ஐந்து கார்கள் மற்றும் ஏழு இரு சக்கர வாகனங்கள் என அவரின் மொத்த சொத்து மதிப்பு 18 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் உதவி செய்து குடும்பத்தில் நடு ரோட்டில் விட்டுவிடுபவர்களின் மத்தியில் மயில்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.