சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படம் காவி உடையில் சித்தரிக்கப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட கொள்கைப் புயலைக் கிளப்பியுள்ளது!
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதுமே மியூட்-ல இருக்கவர் முதல்வராக இருக்காருங்கிற தைரியத்துல தான் கவர்னர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடிச்சிருக்காங்க” என்று தற்போதைய சோபா மாடல் அரசு என்று மிகக் காரசாரமாக வறுத்தெடுத்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக திருவள்ளுவர் நாளைக் கொண்டாடும் வேளையில், ‘வைகாசி அனுஷம் தான் திருவள்ளுவர் நாள்’ எனப் புது உருட்டைக் கிளப்புவதாகவும், தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதே வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரைக் கடுமையாகக் கண்டித்து சங்கிகளைத் திருத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் பாசிஸ்டுகளுக்கும், அதை வேடிக்கை பார்க்கும் சோபா மாடல் அரசுக்கும் தனது அனல் பறக்கும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள உதயநிதி, “தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட அனுமதி கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது; கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்கத் தயங்குவது ஏன்?” என எழுப்பியுள்ள லோக்கல் அரசியல் கேள்விகள் இப்போதே விவாதப் புகையைக் கிளப்பியுள்ளது!
