பிரபல வில்லேஜ் குக்கிங் youtube சேனலின் பெரிய தம்பி தொடர் சிகிச்சையில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். Youtube இல் 2.5 கோடி பாலோயர்களை கொண்டு உள்ள இந்த சேனல் உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக இன்னைக்கு ஒரு புடி என்ற வசனத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் இதய நோய் பிரச்சனையால் மார்ச் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.