முதுநிலை மருத்துவ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா இறப்பில் தற்போது புதிய திருப்பங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலையில் மருத்துவ பட்டத்திற்காக மருத்துவ கல்வி பயின்று வந்த 27 வயதான மாணவி சுகிர்தா கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய கல்லூரி விடுதி அறையிலேயே கடந்த 6ஆம் தேதி தசையை தளர்வடைய செய்யும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இந்த விசாரணை போது அந்த மாணவி தங்கியிருந்த அறையிலேயே அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதியிருந்தார். அந்த தற்கொலை கடிதம் போலீசாருக்கு கிடைத்திருந்தது.

அந்த கடிதத்தின் அடிப்படையில் கடிதத்தில், துறையின் தலைவர் பரமசிவன், அதே போல அவருடன் மூன்றாம்  ஆண்டு படித்து வந்த ஹரிஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் பல்வேறு விதமாக தொல்லை கொடுத்ததாகவும், அந்த துறை தலைவர் பரமசிவம் அவருக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவி கடிதத்தில் எழுதி இருந்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பி இந்த வழக்கை நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் கல்லூரியின் உடைய பேராசிரியர் பராமசிவன் மீதும், அதேபோல மூன்றாம் ஆண்டு படிக்கக்கூடிய 2 மாணவர்கள் மீதும் இந்த வழக்காது பாய்ந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவியின் உடலானது சொந்த ஊரான தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில் பல்வேறு நிலைகளில் போலீசார் தொடர்ந்து தாமதமாக செயல்படுவதாக அந்த தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை முன்னெடுக்க வேண்டும். அவருடைய சாவில் மர்மம் இருக்கிறது என்று பெற்றோர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக  துறை தலைவர் மற்றும் 2 மாணவர்களை நேரடியாக அழைத்து விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முதுநிலை மருத்துவ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேராசிரியர் பரமசிவன், சக மருத்துவர்கள் ஆன ஹரிஷ், ப்ரீத்தி ஆகியோர் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.