ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்திவரும் நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை முதல் நள்ளிரவு முதல் மாறி மாறி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏவுகணை தாக்குதல் மற்றும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் போர் தீவிரமடைந்துள்ளது இந்நிலையில் தமிழக அரசு சார்பாக ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலேம்புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று தமிழர் நலத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

ஜெருசலேம் பகுதியில் ஜெருசலம் என்ற கிறிஸ்தவர்களுடைய புனித நகரம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் அதிகம். தமிழகத்திலிருந்து பலரும் அதற்காக செல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்களுடைய புனித தளமாக ஜெருசலேம் நகரம் விளங்குகிறது. எனவே இஸ்ரேல் – காசா – பாலஸ்தீனம் இடையே ஒரு போர் பதற்றம் சூழல் நிலவி வருகிறது.  தமிழகத்திலிருந்து சென்ற 2க்கும் மேற்பட்ட பாதிரியார்களும் அங்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வந்தாலும் கூட இனிமேல் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று தமிழக அரசினுடைய வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

ஏன் என்று சொன்னால் நேற்று அரை மணி நேரத்திற்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து அனுப்பப்பட்டதாக தகவல் தெரிகின்றன. போர் பதற்றம் காரணமாக ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் அந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 15க்கும் மேற்பட்டோர் அங்கு ஒரு சிக்கி உள்ளனர். எனவே இது போன்ற  சூழ்நிலையில் பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.