கடந்த ஒன்பதாம் தேதி கான்பூரை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் லக்னோவை சேர்ந்த சோனாலி என்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக கோவா சென்றுள்ளனர். கோவாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

சனிக்கிழமை காலையில் ஆகாஷ் தனது மனைவி சோனாலியை அவரது தாய் தந்தையிடம் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு தான் அந்த பெண்ணிற்கு மிகப்பெரிய சோகம் நடந்து உள்ளது. ஆகாஷ் நண்பர் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது பெட்டில் ஆகாஷ் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார்.

இதையடுத்து விரைந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகாஷின் சடலத்தை பார்த்த சோனாலி “திருமணத்திற்கு வைத்த மருதாணி அழிவதற்குள் என் கணவர் என்னை விட்டுப் போய்விட்டாரே” என்று கதறியது பார்ப்போரை கலங்க செய்தது.