
ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிபேலா பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஜோதி மற்றும் மந்திரா ஆகிய 13 வயது சிறுமிகள் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.இந்த மாணவிகள் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்து பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக தகவல் பெற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.