சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளைப் பெற சிலர் செய்யும் செயல்கள்  நாளுக்கு நாள் ஆபத்தானதாக்கி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில், சில வாலிபர்கள் உயர் மின்சார கம்பிகளில் ஸ்டண்ட் செய்வது போன்ற ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு ஆற்றங்கரையிலுள்ள கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு, சிலர் உயரமான மின்கம்பிகளில் ஏறி, அவற்றில் தொங்கும் வகையில் சாகசம் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கீழே ஆறு ஓடிக்கொண்டிருக்க, மேலே கம்பிகளில் தொங்கும் இந்த செயல்கள், எந்த நேரத்திலும் பெரிய விபத்து ஏற்படுத்தக்கூடியவை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mozo meme (@mozo_meme)

இவ்வாறு மின்கம்பிகளின் அருகே செல்லுவதிலும், மேலும் அவற்றில் ஏறி தொங்குவதிலும், சிறு தவறு கூட மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என மின்சாரத்துறை எச்சரிக்கைகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

மேலும் கம்பிகளில் தொங்கும் வாலிபர்களின் முகபாவங்கள், இந்தச் செயல் கவனத்தை ஈர்க்கவும், சமூக ஊடகங்களில் பிரபலமாக வரவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்பதை வெளிக்காட்டுகின்றன. அருகிலிருந்த மற்றவர்களும் இதைக் வேடிக்கையாகப் பார்த்து ரசிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்தச் செயல் ஒரு சாதாரண விளையாட்டாக தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மரண சாகசம் என பலரும் எச்சரிக்கின்றனர்.