கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடியின் வானொலி வழியே  மன்கிபாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி உங்களுடன் உரையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறி தொடங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பேசிய போது, இந்த முறை பத்ம விருதுகளை பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர். பழங்குடி வாழ்க்கை நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது. தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடியின சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். மேலும் பழங்குடியினரின் மொழிகளான டோடோ, குய், குவி மற்றும் மண்டா போன்றவை பற்றி பணிகளில் ஈடுபட்ட பலம்பெறும் பிரபலங்கள் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவால் முன்மொழிவு பட்டு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு போன்றவற்றை கடைபிடிக்கும் முடிவை ஐநா சபை எடுத்துள்ளது. யோகா என்பது சுகாதாரத்துடன் சம்பந்தம் உடையது சுகாதாரத்தில் சிறு தானியங்களும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த இரண்டை பற்றிய செயல் திட்டங்களிலும் பொதுமக்கள் பங்கு வகித்து வருகின்றனர். அதேபோல் தங்களது வாழ்வில் சிறுதானியங்களையும் பெரிய அளவில் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

சிறுதானிய தொழில் முனைவோர்களை பற்றி நீங்கள் கேட்டு தெரிந்ததுண்டா? ஒடிசாவில் சிறுதானிய இயக்கத்தின் ஒரு பகுதியாக சுந்தர்கார் என்னும் பழங்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு ஒன்று தற்போது தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் சிறுதானியங்களில் இருந்து பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை உண்பதற்காக உருவாக்கி வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் 1500 பெண்கள் சிறுதானியங்களில் இருந்து குக்கீகள்,  ரசகுல்லா, குலோப் ஜாமுன் என ஒவ்வொன்றையும் உருவாக்கி வருகின்றனர். சந்தையில் அவற்றின் தேவை அதிகரிப்பால் அந்த பெண்களின் வருவாயும் அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.