தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு கேட்டு வருகின்றனர். அந்தவகையில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி TRபாலு நோட்டீஸ் அனுப்பிஇருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் அண்ணாமலை, ”டி.ஆர்.பாலுவுக்கு பல நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பங்குகள் இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே மன்னிப்பும் கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.